உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கஞ்சா விற்ற கோவை வாலிபர் கைது

கஞ்சா விற்ற கோவை வாலிபர் கைது

ஊட்டி; நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜி1 போலீஸ் எஸ்.ஐ., ஹரிஹரன் தலைமையிலான போலீசார் ஊட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மான் பூங்கா ரயில் தண்டவாளப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் சோதனை செய்ததில் பையில் விற்பனைக்காக, 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில் அவர் கோவை தேவராயபுரத்தை சேர்ந்த நியூட்டன், 28, என்பதும் இதுபோல் ஏற்கனவே பல போலீஸ் ஸ்டேஷன்களில் இவர் மீது கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை