உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஸ்கூட்டர் டிவைடரில் மோதி கல்லூரி மாணவி பலி

ஸ்கூட்டர் டிவைடரில் மோதி கல்லூரி மாணவி பலி

பாலக்காடு, ; கேரள மாநிலம், பாலக்காடு புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால்- - வித்யா தம்பதியரின் மகள் அக் ஷரா, 19. கோவையில், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர், நேற்று காலை கஞ்சிக்கோடு கேந்திரிய வித்யாலயாவில், பத்தாம் வகுப்பு படிக்கும் சகோதரன் அரவிந்தை, பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து சென்றார்.அதன்பின், வீடு திரும்பிய போது, காலை, 9:00 மணிக்கு, கோவை- - கோழிக்கோடு பைபாஸ் ரோடு, கொப்பம் சந்திப்பில், அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரியை கண்டு ஓரமாக சென்ற போது, ஸ்கூட்டர் டிவைடரில் மோதியது. இதில், தலையில் அடிபட்டு சாலையில் விழுந்து அக் ஷரா, ரத்தம் கசிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியது.தகவல் அறிந்து அங்கு வந்த, பாலக்காடு டவுன் மேற்கு போலீசார், மாணவியின் உடலை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி