உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவில் கட்டுமான பணி துவக்கம்

கோவில் கட்டுமான பணி துவக்கம்

பந்தலுார்;பந்தலுார் அருகே பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் கட்டுமான பணி துவங்கியது.தமிழக எல்லை பகுதியாக, பந்தலுார் அருகே நம்பியார்குன்னு சோதனை சாவடி அமைந்துள்ளது. இதனை ஒட்டி வெண்டோல் பகுதி அமைந்துள்ளது. இங்கு பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இதன் கூடுதல் கட்டடம் கட்டுமான பணி நேற்று தொடங்கியது. இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் கோவில் கமிட்டி தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். செயலாளர் ஜிசேஷ், மகளிர் பிரிவு நிர்வாகிகள் ஓமனா, யசோதா முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அயோத்தியில் நடந்த பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஜனை நடந்தது. தொடர்ந்து, கட்டுமான பணிக்கான சிறப்பு பூஜைகளை கோவில் மேல் சாந்தி கவிந்தன் தலைமையிலான குழுவினர் செய்தனர். சிறப்பு பூஜை மற்றும் நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். பொருளாளர் பிரமோத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை