உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

கோத்தகிரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

கோத்தகிரி,; கோத்தகிரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து கமிஷனர் பொறுபேற்றார்.நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற, கோத்தகிரி பேரூராட்சி, வரி இன வருவாய், மக்கள் தொகை அடிப்படையில், கடந்த மார்ச் மாதம், 24ம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் புவனேஷ்வரி அலுவல் பணிகளை நிர்வகித்து வருகிறார்.இந்நிலையில், குன்னுார் நகராட்சி கமிஷனர் இளம்பரிதி, கோத்தகிரி நகராட்சிக்கு, புதிய கமிஷனராக (பொ) நேற்று பொறுப்பேற்று கொண்டார். கோத்தகிரி நகராட்சி புதிய கமிஷனரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட, பணியாளர்கள் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை