உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண தொகை

காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண தொகை

பந்தலுார் : பந்தலுாரில் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு, வனத்துறை சார்பில், இரண்டாம் கட்டமாக நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.பந்தலுார் அருகே எடத்தாள் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் குமரன்,39. இவர் கடந்த மார்ச் மாதம், 4-ம் தேதி, அருகில் உள்ள காபி தோட்டத்தில் காபி கொட்டைகள் பறித்து கொண்டிருந்த போது, வந்த காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், 9-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, முதல் கட்டமாக வனத்துறை சார்பில், 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.இந்நிலையில், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர்கள் கருப்பையா, அருள்மொழிவர்மன், வனச்சரகர்கள் ரவி, அய்யனார், வனவர் பெலிக்ஸ் உள்ளிட்டோர், உயிரிழந்த குமரன் மனைவி சீதா, மகன் சஞ்சய் குமார் ஆகியோரை நேரில் சந்தித்து, 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.வனத்துறையினர் கூறுகையில்,'இந்த பணத்தை வீணாக செலவிடாமல், வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். இறந்தவரின் குழந்தை சஞ்சய்குமார் படிப்பை நிறைவு செய்த பின்னர் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் வனத்துறையின் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை