பயணிகள் அவதி
பந்தலுார்: பந்தலுார் அருகே, தமிழக எல்லை பகுதியில் தாளூர் உள்ளது. இந்த பகுதிக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த பகுதி, வயநாடு, தமிழகம் இடையிலான முக்கிய சாலையாக உள்ள நிலையில், பொதுமக்கள் பயன் படுத்தும் வகையில், நிழற்குடையை ஒட்டி கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், கட்டியது முதல் இதுவரை கழிப்பிடம் திறந்து செயல்படுத்தாத நிலையில், இந்த பகுதிக்கு வந்து செல்லும் இரு மாநில பயணிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்தால், கட்டப்பட்ட கழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.