உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இளம் பெண்ணிடம்ரூ. 5.66 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார்

இளம் பெண்ணிடம்ரூ. 5.66 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசில் புகார்

ஊட்டி : குன்னுாரில், 'ஆன்லைனில்' கூடுதல் லாபம் தருவதாக கூறி 5.66 லட்சம் இளம் பெண்ணிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது. குன்னுார் பகுதியை சேர்ந்த, 30 வயது இளம் பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராமில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. வீட்டில் இருந்து பணி புரிந்தால் நல்ல சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி டெலிகிராமில் தேவையான விவரங்களை பதிவு செய்தார். மர்ம நபர்கள் ஆன்லைன் வாயிலாக சில டாஸ்க்கள் கொடுத்து அதை நிறைவேற்ற கூறியுள்ளனர். தொடர்ந்து, பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி ஆரம்பத்தில் ஆயிரங்களில் முதலீடு செய்து, அதன் பின் லட்சங்களில் முதலீடு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் , 5.66 லட்சம் ரூபாய் முதலீடு செய்தும் ஆன்லைன் டாஸ்க்களை முடித்து கொடுத்தார். மர்ம நபர்கள் கூறியது போல், கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் இதுகுறித்து ஆன்லைன் வாயிலாக ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !