உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில்... தொடர் குழப்பம்! பிழைகளின்றி ஆன்லைனில் பதிவேற்றுவது அவசியம்

நீலகிரியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியில்... தொடர் குழப்பம்! பிழைகளின்றி ஆன்லைனில் பதிவேற்றுவது அவசியம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் துரிதமாக நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு படிவத்தை 'ஆன்லைன்' வழியாக நிரப்ப தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில், அரசு தேயிலை தோட்ட நிறுவனமான, 'டான்டீ' உட்பட எஸ்டேட் நிர்வாகங்களில் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். படுகர் மக்கள் வாழ்ந்து வரும் ஹட்டிகளில் வாழ்ந்த ஏராளமான மக்களும், கோவை, மேட்டுப்பாளையம், பெங்களூர், உள்ளிட்ட பல இடங்களுக்கு பணி நிமிர்த்தமாக இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், 'தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பது; இறந்தவர்கள் முகவரி மாறியவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளவர்கள் போன்றோரை நீக்குவது இதன் பிரதான நோக்கமாக உள்ளது. தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விண்ணப்ப படிவத்தை ஓட்டுச் சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்) வாக்காளரின் வீடுகளுக்கு சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்து வருகின்றனர். கிராமங்களில் ஓட்டுரிமைக்காக மக்கள் முகாம்களில் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது வாக்குரிமையை உறுதி செய்கின்றனர். எனினும், ஊட்டி, குன்னுார், கூடலுார் சட்டசபை தொகுதிகளில் பல வார்டுகளின் எண்கள் மாறி உள்ளன. இவற்றை சரியாக ஆய்வு செய்யாமல் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், இடம் பெயர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்களின் பெயர்கள் தற்போதும் வாக்காளர் பட்டியலில் இருப்பதால் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றை 'ஆன்லைன்' பதிவுகளில் பிழைகள் இன்றி முறையாக பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குழப்பங்கள் நீடிப்பு லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் எஸ்டேட் பகுதிகள், கிராமங்களில் பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன. உதாரணமாக, குன்னுார் சட்டசபை, கோடேரி பகுதியில், முதலில், 9வது வார்டில் இருந்து பகுதிகள், 10, 11 என மாறின. தற்போது, 12வது வார்டாக உள்ளன. ஆனால், வாக்காளர் பட்டியலில், வார்டு எண்,11, 12, 17 வார்டுகள் என குறிப்பிட்டு இருந்ததுடன், அதில், 9, 10 வார்டுகளின் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர். 'வீட்டு எண், 10ல் 9 பேர்; 9ல் 14பேர்; 11ல் 79 பேர்; எண், 12ல் 33 பேர்,' என, வாக்காளர்களாக உள்ளதாக இருந்த குளறுபடிகள் கடந்த தேர்தலின் போது கண்டறியப்பட்டன. இத்தகைய பிரச்னைகளால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இதே போல மாவட்டத்தில் மற்ற இடங்களில் உள்ள வார்டுகள் வரன்முறை செய்வதில் உள்ள குளறுபடிகள் நீக்க வேண்டும். தற்போதைய சிறப்பு திருத்தம் முறையில், தரவுகள் அவசரகதியில் பதிவேற்றாமல், பிழைகள் இல்லாமல் முறையாக பதிவு செய்ய வேண்டியதும் அவசியம், மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மக்க ளிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் பதிவுகளையும் பிழைகளின்றி சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உரிய நடவடிக்கை நிச்சயம் நீலகிரி டவுன் பஞ்., உதவி இயக்குநர் மணிகண்டன் கூறுகையில், ''வார்டுகளில் அந்தந்த பிளாக் முறையில், வீட்டு எண்கள் வழங்கப்படுகிறது. கடந்த, 2001ல் தேர்தல் முன்பு வார்டுகளை வைத்து, வீட்டு எண்கள் வழங்கப்பட்டது. கோடேரி கிராமத்தில் அனைத்து வீட்டு எண்களும் பிளாக் எண்ணாக மாற்றவும், இங்குள்ளவர்களுக்கு மட்டும், மற்ற நடவடிக்கைகளுக்கு வருவாய் துறையினர் என்.ஓ.சி., இல்லாமல் சரி செய்து கொடுக்கவும் உள்ளனர். இதேபோல, மாவட்டத்தில் பிற கிராமங்களில் உள்ள குழப்பங்களுக்கு தீர்வு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ