உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

கராத்தே போட்டியில் சாதித்தவர்களுக்கு பாராட்டு

குன்னுார்; தென் மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதித்த கராத்தே வீரர்களுக்கு, குன்னுாரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குன்னுாரில் உள்ள 'மாருதி ஷிடோ-ரியூ' கராத்தே பள்ளி மாணவ, மாணவியர் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த, 2வது தென் மாநில ஓபன் சாம்பியன்ஷிப், 2025 போட்டியில் பங்கேற்றனர். ரென்ஷி பழனிவேல் தலைமையில் பங்கேற்ற அணியினர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களை பெற்றனர். குன்னுாரில் நடந்த பாராட்டு விழாவில், கராத்தே பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமையை கொண்டு வந்த அணி பயிற்சியாளர் சென்செய் அருண்குமார் உட்பட மாணவர்கள் இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைமை பயிற்றுவிப்பாளர் இனயத்துல்லா மற்றும் பயிற்றுனர்கள் பசுவையா, லிங்கராஜன், செம்பாய் மோகன் உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !