காங்., ஆர்ப்பாட்டம்; நகராட்சிக்கு கண்டனம்
பந்தலுார்; பந்தலுாரில் காங்., சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; நெல்லியாளம் நகராட்சியின் முறை கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பந்தலுார் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்,'தேர்தல் வாக்குறுதி படி செக்சன்-17 நிலத்தில், வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்; சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும்; மனித- வன விலங்கு மோதலை நிரந்தரமாக தடுக்க வேண்டும்; நெல்லியாளம் நகராட்சி தலைவர் -உறுப்பினர் இடையே பனிப்போரால் வளர்ச்சி பணிகள் முடங்கி கிடக்கிறது; தெருவிளக்கு அமைப்பதில் மற்றும் அம்மா உணவகத்தில் நடைபெறும் முறைகேடு தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.அதில், பந்தலுார் வட்டார தலைவர் ரவி, கூடலுார் வட்டார தலைவர் அம்சா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபிநாத், அஷ்ரப், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர் விஜயம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.