உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டாம் கட்ட தற்காலிக கடைகள் கட்டும் பணியில் வேகம்

இரண்டாம் கட்ட தற்காலிக கடைகள் கட்டும் பணியில் வேகம்

ஊட்டி : ஊட்டி ஏ.டி.சி., பகுதி அருகே, இரண்டாவது கட்டமாக, தற்காலிக கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஊட்டி மார்க்கெட் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 1,500 கடைகள் உள்ளன. கடைகளை முழுமையாக அகற்றி, புதிய கடைகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதற்காக, மாநில அரசு சார்பில், 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதற்கட்டமாக, 180 கடைகள் இடிக்கப்பட்டன. வியாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, ஏ.டி.சி., பகுதி அருகே, 180 தற்காலிக கடைகள் கட்டப்பட்டு, தற்போது வியாபாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக, தற்போது அதே பகுதியில், 180 கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து, 'பணியை விரைந்து முடிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி