மேலும் செய்திகள்
முதுகலை பட்டப்படிப்பிற்கு 'மாப் அப்' கலந்தாய்வு
07-Sep-2025
ஊட்டி:ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு நடக்கிறது. கல்லுாரி முதல்வர் பிராங்கிளின் சாஜோஸ் அறிக்கை: ஊட்டி அரசு கலை கல்லுரியில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு மாணவர் சேர்க்கையானது தரவரிசை மற்றும் இன சுழற்சி மாற்றம் அடிப்படையில் நடக்கும். இன்று (25ம் தேதி) அனைத்து முதுநிலை பட்ட மேற்படிப்பு கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள், அனைத்து இளநிலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு, சம்பந்தப்பட்ட துறைகளில் காலை, 9:30 மணி முதல் நடைபெறும். கலந்தாய்விற்கு வரு வோர் ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்ப படிவம், மாற்று சான்றிதழ், ஆன்லைன் ஜாதி சான்றிதழ், 10, 11, 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முதுநிலை பிரிவுகளில் சேர பட்டப்படிப்பில், 5 பருவங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் அதற்கான அசல் சான்றிதழ் மற்றும் நகல்கள் எடுத்து வர வேண்டும். பாரதியார் பல்கலைக்கழக இணைப்பில் உள்ள கல்லுாரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கான கட்டணம் தோராயமாக முதுநிலைக்கு, 3,500 ரூபாய், இளங்கலை,4,500 இணைப்பு பெறாத கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்கள் முதுநிலை, 4,600, இளங்கலை, 5,000 ரூபாயாகும். கட்டணம் இணைய வழி அல்லது 'ஜிபே' வழியாக செலுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
07-Sep-2025