மேலும் செய்திகள்
மனைவி நல வேட்பு தின விழா
31-Aug-2025
கூடலுார்; கூடலுாரில் நடந்த மனைவி நல வேட்பு விழாவில் தம்பதிகள் பங்கேற்றனர். கூடலுார் நாடார் திருமண மண்டபத்தில், மன வளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்ற துணைத் தலைவர் பாண்டியராஜன் தலைமை விதித்து பேசினார். அருவங்காடு அறிவு திருக்கோவில் துணை பேராசிரியர் மணிமாறன் வாழ்த்தி பேசினார். பங்கேற்ற தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்தி, கனி, மலர் பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சி யில் மனவளக்கலை பேராசிரியர் கணேசன், பேராசிரியர் சந்திரகலா உள்ளிட்ட பங்கேற்றனர்.
31-Aug-2025