உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆண்டு விழாவில் கலக்கிய குட்டீஸ்

ஆண்டு விழாவில் கலக்கிய குட்டீஸ்

பந்தலுார்: பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின், 59-வது ஆண்டு விழா நடந்தது. ஆசிரியர் பாக்யராஜ் வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி ஆண்டறிக்கை வாசித்தார். திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பேச்சு போட்டி, பாடல், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பெற்றோர் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை