உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இடிந்து விழுந்த தடுப்பு சுவரால் பாதிப்பு

இடிந்து விழுந்த தடுப்பு சுவரால் பாதிப்பு

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, இடிந்த பள்ளி தடுப்பு சுவர் சீரமைக்காததால், மாணவர்களுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.கோத்தகிரி கேர்பெட்டா அரசு நடுநிலைப் பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கோத்தகிரி -கோடநாடு சாலை ஓரத்தில் அமைந்துள்ள இப்பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பு தடுப்பு சுவரின் நடு பகுதி சமீபத்தில் பெய்த மழையில் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இடிந்த பகுதியில் தற்காலிகமாக, மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மழை நாட்களில் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவரும் விழுந்து, வாகனங்கள் அதிகம் இயக்கப்படும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் பள்ளியின் பாதுகாப்பு கருதி, நிரந்தரமாக தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை