உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெடுஞ்சாலையில் பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நாள்தோறும் சிரமம்

நெடுஞ்சாலையில் பாலத்தை ஒட்டி சேதமடைந்த சாலை; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் நாள்தோறும் சிரமம்

கூடலுார்; முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட, புதிய பாலங்களை ஒட்டி சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மைசூரு தேசிய நெடுஞ்சாலை கார்குடி, கல்லல்லா பகுதியில் சேதமடைந்த பழைய பாலத்தை அகற்றி, 3.85 கோடி ரூபாய் செலவில் புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.இந்த பாலங்களை ஒட்டி சாலையின் இருபுறமும் சீரமைக்கப்பட்டது. அந்த பகுதி சில வாரங்களில் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.சேதமடைந்து வரும் சாலையை தரமாக சீரமைக்க ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்காததால் ஓட்டுனர்கள் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'முதுமலை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கார்குடி, கல்லல்லா பகுதியில், கட்டப்பட்ட புதிய பாலங்கள் வழியாக கடந்த ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த பாலத்தை ஒட்டி இருபுறமும் சிறிது துாரம் சீரமைக்கப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், அப்பகுதியை ஆய்வு செய்து, மீண்டும் தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை