உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சேதமான நடைபாதை மக்கள் நடந்து செல்ல சிரமம்

 சேதமான நடைபாதை மக்கள் நடந்து செல்ல சிரமம்

கோத்தகிரி: கோத்தகிரி கட்டபெட்டு பஜார் -குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, நடைபாதை மோசமாக உள்ளதால், மக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கட்டபெட்டு பஜாரில் இருந்து, குன்னுார் மற்றும் அருகில் உள்ள சுற்று வட்டார கிராமங்களுக்கு நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் நடைபாதையை பயன்படுத்துகின்றனர். ஜெகதளா பேரூராட்சி பராமரித்துவரும் நடைபாதையின் படிக்கட்டுகள் உடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் அடைப்பட்டுள்ள காரணத்தால், பாதையில் வழிந்தோடுகிறது. துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் நடந்து சென்றுவர சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் போதையில் வரும் பலர் தடுக்கி விழுவது வழக்கமாக உள்ளது. எனவே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை