உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமடைந்த கழிப்பிடம்; பயணிகள் அவதி

சேதமடைந்த கழிப்பிடம்; பயணிகள் அவதி

கூடலுார்,; 'கூடலுார் சில்வர் கிளவுட் அருகே, சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டி கிடக்கும் நகராட்சி கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக வந்து செல்கின்றனர். இவர்களின் பயனுக்காக, கூடலுார் சில்வர் கிளவுட் வன சோதனை சாவடி அருகே, நகராட்சி சார்பில், 2003ல் கழிப்பிடம் கட்டப்பட்டது.தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில், அதனை ஒட்டி புதிய கழிப்பிடம் அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் மரம் விழுந்து புதிய கழிப்பிடம் சேதமடைந்தது. தொடர்ந்து வாகனம் மோதி பழைய கழிப்பிடவும் சேதமடைந்தது.இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இவ்வழியாக, பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில், நகராட்சி சார்பில் கட்டப்பட்ட இரண்டு கழிப்பிடமும், சேதமடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளது. நீண்ட துாரம் பயணித்து வரும் சுற்றுலா பயணிகள், கழிப்பிடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த கழிப்பிடங்களையும், சீரமைத்து திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை