மேலும் செய்திகள்
துார்வாராத 'செக்டேம்' வனவிலங்குகளுக்கு சிக்கல்
25-Sep-2025
கூடலூர்: -கூடலூரில் பராமரிப்பின்றி காணப்படும் தடுப்பணைகளை சீரமைத்து, கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.என, வலியுறுத்தப்பட்டுள்ளது. கூடலூர் வனக்கோட்டத்தில், கோடை வறட்சியில் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. உணவு, குடிநீர் தேடி குடியிருப்புகள் நுழையும் வன விலங்குகள் விவசாய பயிர்கள், வீடுகளை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. கோடையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆறுகள், நீரோடைகளில் வனத்துறை சார்பில் தடுப்பணைகள் அமைத்துள்ளனர். இதில், பல தடுப்பணைகள் பராமரிப்பின்றிசேதமடைந்துள்ளது. பல இடங்களில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. வறட்சி காலங்களை கருத்தில் கொண்டு தடுப்பணைகளை சீரமைக்க வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது. வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலூரில், ஜன., முதல் வனப்பகுதியில் ஏற்படும் வறட்சியின் காரணமாக, வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தடுப்பணைகளை சீரமைப்பதன் வாயிலாக ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உணவு, குடிநீர் தேடி குடியிருப்புக்குள் நுழையும் யானைகளால் மனித -- யானை மோதல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.
25-Sep-2025