உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து

தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் ஆபத்து

கூடலுார்; கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன விபத்து அபாயம் ஏற்பட்டுஉள்ளது. கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக, உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா சுற்றுலா வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால், சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில், வழக்கத்தை விட கூடுதலாக சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகிறது. இச்சாலையில், ஊசிமலை -தொரப்பள்ளி வரை சேதமடைந்துள்ள, 16 கி.மீ., சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனிடைேய ஊசிமலை முதல் கூடலுார் வரை சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டு வருவதுடன், வாகன விபத்துக்கள் அபாயமும் உள்ளது. டிரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலை, கொண்டை ஊசி மற்றும் ஏராளமான சிறிய வளைவுகளை கொண்டுள்ளது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாத நிலையில், சாலையோரம் வளர்ந்துள்ள முட்புதரால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ