அபாயகரமான மரங்கள் அகற்றாவிட்டால் ஆபத்து
குன்னுார்; 'குன்னுார் வண்ணாரபேட்டை அருகே அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.குன்னுார் பேரக்ஸ் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் மீது மரம் விழுந்து டிரைவர் பலியானார். தொடர்ந்து. இந்த பகுதியில், 206 ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, குன்னுார் 'ஹவுசிங் யூனிட்' அருகே வண்ணாரபேட்டை பகுதியில் வீடுகளின் அருகில் ஆபத்தான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. 'இந்த மரங்கள் விழுந்தால் பாதிப்பு ஏற்படும்,' என, இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மழை கால பாதிப்பு ஏற்படும் முன், இந்த மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.