உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் ஸ்டாண்டில் அபாய மரங்களால் ஆபத்து அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்டில் அபாய மரங்களால் ஆபத்து அதிகரிப்பு

கோத்தகிரி; கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில், அபாய மரங்கள் நிறைந்துள்ளதால், மழையுடன் காற்று வீசும் பட்சத்தில், அபாயம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, அண்ணா பஸ் ஸ்டாண்ட், 35 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஊட்டி, குன்னூர் உட்பட, கிராமப்புறங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு, 55 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் போதிய இடவசதி இல்லாத நிலையில், சாலையில் பஸ்கள் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. தவிர பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டின் மேற்புறத்தில், அபாயகரமான நிலையில் கற்பூர மரங்கள் அகற்றபடாமல் உள்ளன. இதனால், மழையுடன் காற்று வீசும் பட்சத்தில், போதிய வேர் பிடிமானம் இல்லாத மரங்கள் விழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு மழையின் போது, மரம் விழுந்து பஸ் ஸ்டாண்டின் மேற்கூரை சேதமடைந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது, ஆடி மாத காற்று வீசி வரும் நிலையில், மரங்கள் விழுந்து அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை