உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அபாய மரங்களால் ஆபத்து; அகற்றினால் அசம்பாவிதம் இல்லை

அபாய மரங்களால் ஆபத்து; அகற்றினால் அசம்பாவிதம் இல்லை

ஊட்டி; ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் பல அபாய மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், மழை நாட்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.நீலகிரி மாவட்டத்தில், சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில், அபாய மரங்கள் நிறைந்துள்ளன. இந்த மரங்கள், மழையுடன் காற்று வீசும் போது, சாலையில் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது.இதனை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, மின் துறை மற்றும் வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை குழுவினர், மாவட்ட முழுவதும் உள்ள, அபாய மரங்களை கணக்கெடுத்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும், பல பகுதிகளில் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் வானுயர்ந்த கற்பூரம், சாம்பிராணி உள்ளிட்ட அபாய மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் ஊட்டி படகு இல்லம் பகுதியில், பல மரங்கள் அபாய நிலையில் உள்ளன. எனவே, விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ