உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனமாக அறிவிக்கப்பட்ட நிலம்: நீலகிரி எம்.பி.,யை சந்திக்க முடிவு

வனமாக அறிவிக்கப்பட்ட நிலம்: நீலகிரி எம்.பி.,யை சந்திக்க முடிவு

கூடலுார் : கூடலுார் செறுமுள்ளி பகுதியில் நிலத்தை, வன நிலமாக மாற்றிய அரசு உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கூடலுார் சிறுமுள்ளி பகுதியில் நில அளவை எண்-243/3 பகுதியில் உள்ள, 73.5 ஏக்கர் நிலத்தை, அரசு வன நிலமாக மாற்றி, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த, உத்தரவுக்கு, அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான, அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம், போஸ்பாரா பகுதியில், தேவர்சோலை பேரூராட்சி துணை தலைவர் யூனுஸ்பாபு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், 'பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் இப்பகுதியை, வன நிலமாக மாற்றியதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை நடைமுறைபடுத்த கூடாது,' என, வலியுறுத்தினர். தொடர்ந்து, 'கூடலுார் வரும், நீலகிரி எம்.பி., ராஜாவை சந்தித்து, இப்பிரச்னை குறித்து, தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில், கூடலுார் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ், லியாகத்தலி (தி.மு.க.,), வாசு, மணி (மா.கம்யூ.,), அம்ஷா (காங்.,), அருண் (பா.ஜ.,), முகமதுகனி (இ.கம்யூ.,), ஹனிபா (கவுன்சிலர்) பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சிவா அருவங்காடு
அக் 04, 2024 01:02

இது வனம் . நீலகிரி வரும் நமது எம்பி ஒரு புல் கூட புடுங்க முடியாது என்று தெரிகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை