உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மேம்பால பணிகள் தாமதம் எதிர்ப்பு சுடர் ஏற்றி கண்டனம்

மேம்பால பணிகள் தாமதம் எதிர்ப்பு சுடர் ஏற்றி கண்டனம்

பாலக்காடு, ; பாலக்காடு அருகே உள்ள, நடக்காவு ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் தாமதமாவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் 'எதிர்ப்பு சுடர்' ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு அகத்தேத்தறை அருகே உள்ளது நடக்காவு. இப்பகுதி வழியாக ஒலவக்கோட்டில் இருந்து, மலம்புழா பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, பாலக்காட்டில் இருந்து கோவைக்கு செல்லும் ரயில்வே பாதை உள்ளது.முக்கிய பாதை என்பதால், இங்கு ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால், இவ்வழி போக்குவரத்து வெகுவாக பாதித்தது. இதற்குத் தீர்வு காண, இங்கு மேம்பாலம் கட்ட வேண்டுமென, இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, கடந்த, 2017, ஜன., மாதம் மேம்பால கட்டுமான பணிகள் துவங்கின. ஆனால், பணிகள் துவங்கியது முதல் இழுபறியாக நடந்தது. பணிகள் துவங்கி எட்டு ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை.தற்போது, ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தாமதமாகி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கின்றனர். அவசர மருத்துவ சிகிச்சைக்காக பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், பணிகள் தாமதமாவதை கண்டித்து, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், 'எதிர்ப்பு சுடர்' ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ