உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாற்றுத்திறன் மறுவாழ்வு மைய உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு

மாற்றுத்திறன் மறுவாழ்வு மைய உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு

குன்னுார்: குன்னுாரில் உள்ள மறுவாழ்வு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான துவக்க விழா நடந்தது. மையத்திற்கு, 'இன்போசிஸ்' அறக்கட்டளை சார்பில் லிப்ட் கார், குழந்தை மருத்துவம் மற்றும் உணர்வு சிகிச்சை உபகரணங்கள், சென்னை பகதுார் குழுவினரின் ஜெனரேட்டர் வழங்கப்பட்டது. 'இந்திய டிசைன்ஸ்' சார்பில், நீர் சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா, இதனை திறந்து வைத்து பேசுகையில், ''கைண்டர்' டிரஸ்ட், மாவட்டம் முழுவதும் அதிக மையங்களை நிறுவ ஊக்குவித்து வருகிறது. நீலகிரியில் தனித்துவமான ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுதிறன் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச விரிவான வாழ்க்கை சுழற்சி மறுவாழ்வு வழங்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது,'' என்றார். மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ், மாற்று திறனாளிகளுக்கான டிரஸ்ட்டின் சேவைகளை பாராட்டி பேசியதுடன், கன்டோன்மென்ட் போர்டு மருத்துவமனையில் புதிய பிசியோதெரபி வசதிக்கான நடவடிக்கை குறித்து தெரிவித்தார். நீலகிரி எஸ்.பி., நிஷா, வெலிங்டன் கன்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் பாபா சாகிப் லோட் டே, கைண்டர் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டயானா சைரஸ் பரூச்சா, நன்கொடையாளர்கள், பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். டிரஸ்ட் அறங்காவலர் ரமணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !