மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
ஊட்டி: 'வார்டு பகுதிகளில் நிதிநிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார், கமிஷனர் ஏகராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது, 'வார்டுகளில் சாக்கடை அடைப்பால் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போதிய தெரு விளக்குகள் இல்லாததால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தரமான தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மோசமான சாலைகள்; நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். பல வார்டுகளில் குடிநீர் முறையாக வினியோகம் செய்வதில்லை. அதனை முறை படுத்த வேண்டும்,' என்றனர்.கமிஷனர் ஏகராஜ் பேசுகையில், ''வார்டு பகுதிகளில் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிதிநிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக, அடிப்படைவளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,'' என்றார்.
03-Oct-2025