குன்னுார் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சிரமம்
குன்னுார் : குன்னுார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், துாசு படலத்தால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.குன்னுாரில் உள்ள பாரம்பரியம் மிக்க ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், தண்ணீர் கலந்த சேறும், சகதியும் வளாக பகுதியில் கொட்டி வைத்துள்ளனர். அவற்றை முறையாக அகற்றப்படாத நிலையில் துாசு படலம் அதிகரித்துள்ளது.இதனால், நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு நிறுத்தும் வாகனங்களும் துாசியால் சூழப்பட்டு, பயணிகளின் உடைகளும் பாதிக்கப்படுகிறது.எனவே, ரயில் நிலையத்தில் தேங்கி கிடக்கும் சேறு மற்றும் மண்ணை அகற்றி பராமரிக்க நடவடிக்கை எடுகக வேண்டும்.