உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மைசூருக்கு நேரடி பஸ் போக்குவரத்து நிறுத்தம்; கூடலுார் பகுதி மக்கள் அவதி

மைசூருக்கு நேரடி பஸ் போக்குவரத்து நிறுத்தம்; கூடலுார் பகுதி மக்கள் அவதி

கூடலுார்: கூடலுார் - மைசூரு இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடலுார் பகுதியில், கர்நாடகத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு படித்த இளைஞர்கள் மைசூரு, பெங்களூரு பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கூடலுார் - கர்நாடகா இடையே நேரடி பஸ் வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வாக, ஏப்., முதல் கூடலுார்- மைசூரு இடையே நேரடி அரசு பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த பஸ், கூடலுாரில் இருந்து காலை, 7:30; மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு மைசூரு சென்று, அங்கிருந்து காலை, 10:30 மணி, மாலை 5:30 மணிக்கு மீண்டும் புறப்பட்டு, கூடலுார் வந்தடையும். நீலகிரி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்த பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, காலையில் மட்டும், ஊட்டியில் இருந்து மைசூருக்கு, கூடலுார் வழியாக பஸ் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இந்த, பஸ்சில் இருக்கைகள் கிடைக்காமல், கூடலுார் பயணிகள் சிராமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் கூறுகையில், 'கூடலுார் மைசூர் இடையே இரண்டு முறை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த பஸ்சை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுனர் பற்றாக்குறையால், கூடலுார் - மைசூரு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ், அடுத்த வாரம் முதல் மீண்டும் இயக்கப்படும்,' என் ற னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ