மேலும் செய்திகள்
தொடர் தாமதம்! தொடரும் இழுபறியால் சிறு வியாபாரிகள் தவிப்பு
10 minutes ago
ராணுவ மையத்தில் சாகசம்: அசத்திய வீரர்கள்
14 minutes ago
சிவன் மலையில் மகா கார்த்திகை தீபம்
04-Dec-2025
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில், போதிய விலை இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 18 முதல், 22 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இடுப்பொருகளுக்கு, இருமடங்கு விலையேற்றம் கூலி உயர்வு மற்றும் தோட்டப்பராமரிப்பு செலவினம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மேகமூட்டமான காலநிலை நிலவினாலும் அவ்வப்போது வெயில் அடித்து வருவது, உரம் இட்டு பராமரித்த தேயிலை தோட்டங்களுக்கு உகந்ததாக உள்ளது. இதனால், தோட்டங்களில் அரும்பு துளிர்விட்டு, மகசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், கட்டுப்படியான விலை கிடைக்காததால், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
10 minutes ago
14 minutes ago
04-Dec-2025