மேலும் செய்திகள்
புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கினால் பயன்
04-Feb-2025
கூடலுார்: கூடலுாரில் தேசிய நெடுஞ்சாலை ஓரம், கழிவு நீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கூடலுாரில் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய, நடைபாதை சேதமடைந்துள்ளது.இப்பகுதியை, 450 மீட்டர் துாரம் சீரமைக்க சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம், 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணி அக்., மாதம் துவங்கப்பட்டது. முதல் கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், 50 அடி நீளம் நடைபாதை அகற்றப்பட்டு, புதிய நடைபாதை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டது.இப்பணிகளை, கூடுதல், கலெக்டர் கவுசிக் ஆய்வு செய்தார். அவர் உத்தரவுப்படி, தற்போதுள்ள கழிவு நீர் கால்வாயை சேதப்படுத்தாமல், அதனை சற்று உயர்த்தி, அதன் மீது நடைபாதை அமைக்க, 38 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், பணிகள் நடந்து வருகிறது. அதில், புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முதல், பெட்ரோல் பங்க் வரை, கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது நடைபாதை அமைத்துள்ளனர். ஆனால், பெட்ரோல் பங்க் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு மருந்தகம் வரை உள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சீரமைப்பு பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதனை ஒட்டி, 50 மீட்டர் துாரம் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் மீது நடைபாதை பாதை அமைக்காமல் சிறந்த நிலையில் உள்ளது.இதனால், இப்பகுதி நடைபாதையை பயன்படுத்த முடியாமல், மக்கள் சாலையோரம் நடந்து செல்கின்றனர். பணிகளை முழுமையாக முடிக்காததால், வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை பணிகள் பாதியில் நிற்பதால், மக்கள் நடைபாதையை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். நடைபாதை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நடைபாதையின் அகலத்தை ஏற்கனவே இருந்தது போன்று, 5 அடியாக மாற்ற வேண்டும்,' என்றனர்.
04-Feb-2025