| ADDED : மார் 05, 2024 12:44 AM
குன்னுார்;நீலகிரி மாவட்ட செஸ் போட்டிகள் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை அரங்கில் நடந்தது.நீலகிரி மாவட்ட செஸ் அகாடமி மற்றும் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த போட்டியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில், 'நைட் செஸ் அகாடமி' முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டாம் இடத்தை லாரன்ஸ் பள்ளி மாணவர்கள் தட்டி சென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.நடுவராக செஸ் பயிற்சியாளர் ஜூனைஸ் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பொது மேலாளர் பங்கஜ் கோயல் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., செயலாளர் பிரேம்நாத், வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு மாநில தலைவர் காமராஜ், மாவட்ட தலைவர் நெடுமாறன் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.ஏற்பாடுகளை, எஸ்.ஏ.பி.ஆர்., அகாடமி தலைவர் ராஜிவ், மாவட்ட பயிற்சியாளர்கள் உமாசங்கர் பாலசுப்ரமணியம், பிரசாந்த் செபாஸ்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.