மேலும் செய்திகள்
துளிர் திறனறி தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி
10-Apr-2025
கூடலுார்; 'கூடலுாரில் வெப்ப அலை அதிகமுள்ள நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்,' என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் கூடலுாரில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சங்கர் தலைமை வகித்தார். கூட்டத்தில், காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அதில் உயிரிழந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட செயலாளர் மணிவாசகம் செயல் அறிக்கை வாசித்தார். தொடர்ந்து, கோடை வெப்ப அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து ஆலோசனை நடந்தது.கூட்டத்தில், 'வெப்ப அலையில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள, காலை, 11:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்; அமைப்பு சாரா தொழிலாளர்கள், முடிந்தவரை நிழலான பகுதிகளில் பணியாற்ற வேண்டும்; வெப்ப அலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்து டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வெப்ப அலை குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
10-Apr-2025