உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, முத்துாட் பைனான்ஸ் திருப்பூர் மண்டலம் சார்பில், இலவச புத்தகப்பை மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். திருப்பூர் மண்டல மேலாளர் அருண்குமார் தலைமை வகித்து, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ஒழுக்கம், உயர்கல்வி குறித்து அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள், பி.டி.ஏ., தலைவர் ஆலன், பைனான்ஸ் கிளை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை