மேலும் செய்திகள்
பட்டாசு இல்லாத புத்தாண்டு வனத்துறையினர் அழைப்பு
31-Dec-2024
கூடலுார், ;முதுமலை, மசினகுடி அருகே, காட்டு யானை தாக்கி முதியவர் காயமடைந்தார்.முதுமலை மசினகுடி ஆச்சக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி,70. இவர், நேற்று முன்தினம், இரவு, 8:30 மணிக்கு தனது இரண்டு மகள்கள், மூன்று பேர குழந்தைகளுடன், மசினகுடி தனியார் கிளினிக்கிற்கு சென்று, சிகிச்சை பெற்று, வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது யானை வந்துள்ளது. உடன் சென்றவர்கள், சப்தமிட்டபடி ஓடி தப்பினர். ரத்தினசாமி யானையிடம் சிக்கினார். யானை தாக்கியதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். சிங்கார வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் அப்பகுதியினர் உதவியுடன் அவரை மீட்டு, சிகிச்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'காயமடைந்தவருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். காட்டு யானை கண்காணித்து விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அகழி சீரமைக்கப்படும்,' என்றனர்.
31-Dec-2024