உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

மின் நுகர்வோர் குறைதீர் முகாம்

குன்னுார் : குன்னுாரில், மின் வாரியம் மற்றும் தமிழக மின் பகிர்மான குன்னுார் கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடந்தது.இதில், 'மின்கட்டணம், மின் மீட்டர், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பம் மாற்றுதல்,' உட்பட, பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக, 27 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை, நீலகிரி மாவட்ட மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெகதீஸ்வரி பெற்று கொண்டார். இதில், குன்னுார் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை, உதவி செயற்பொறியாளர் ஜான்சன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை