மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு: கொட்டிவாக்கத்தில் அகற்றம்
02-Jul-2025
கூடலுார்; கூடலுார் நகரில், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும். கூடலுார் நகரில் போக்குவரத்து இடையூறு இன்றி மக்கள் நடந்து செல்ல வசதியாக, சாலை ஓரங்களில் கழிவுநீர் கால்வையுடன் கூடிய நடைபாதை அமைத்துள்ளனர். நடைபாதையை ஆக்கிரமித்து, சிறு வியாபாரிகள் கடை வைத்ததால், மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். இதனால், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன், நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் வைக்க கோழிக்கோடு சாலையில் மாற்றிடம் வழங்கப்பட்டது. இதேபோன்று, புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகே, ஊட்டி சாலையில் நடைபாதை நடுவே, மக்கள் நடந்த செல்ல இடையூறாக உள்ள, மின்கம்பங்களை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'நடைபாதை நடுவே உள்ள மின்கம்பிகள், மக்கள் நடந்து செல்ல இடையூறாக உள்ளது. பல ஆண்டுகளாக இதனை மாற்ற நடவடிக்கை இல்லை. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து, நடைபாதை நடுவே உள்ள மின்கம்பங்களை மாற்ற வேண்டும்,' என்றனர்.
02-Jul-2025