உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்

வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்

பந்தலுார்; பந்தலுார் அருகே, வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய யானையால் அச்சம் ஏற்பட்டுள்ளது. பந்தலுார் அருகே ஏலியாஸ் கடை பகுதியில் நேற்று முன்தினம் இரவு யானைகள் முகாமிட்டிருந்தன. யானைகள் சாலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் செல்லாமல், தடுக்கும் வகையில், சேரம்பாடி வனத்துறையினர், ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஏலியாஸ் கடை பகுதியில், சாலையில் நடந்து வந்த யானை, எதிரே வந்த ரோந்துவாகனத்தை தாக்கியது. தந்தத்தால் குத்தி,வாகனத்தினுள் இருந்த வன பணியாளர்களை தாக்க முற்பட்டது. வாகனத்தில் இருந்த பணியாளர்கள் சத்தம் எழுப்பியும், வாகனத்தில் சைரனை ஒழிக்க விட்டும் யானையை அங்கிருந்து விரட்டி உள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'வாகன ஓட்டுனர்கள், யானையை பார்த்தால் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை