உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானையால் குடியிருப்பு சேதம்்; வனத்துறையினர் விசாரணை

யானையால் குடியிருப்பு சேதம்்; வனத்துறையினர் விசாரணை

பந்தலுார், ; பந்தலுார் அருகே ஏலமன்னா மக்கள் குடியிருப்புபகுதிகளை ஒட்டி, 8 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளது. இந்த யானைகள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று, பரமசிவம் என்பவரின் வீட்டு தோட்டத்தில் இருந்த வாழை, பலா போன்றவற்றை உட்கொண்டு, வீட்டை இடித்து உள்ளே செல்ல முயன்றுள்ளன. தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதிக்கு சென்று யானைகளை அங்கிருந்து விரட்டி உள்ளனர். வனச்சரகர் ரவி தலைமையிலான வனக்குழுவினர், ஆய்வு செய்து, 'விரைவில் துறை சார்ந்து உரிய நிவாரணம் பெற்று தரப்படும்,' என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி