உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை உயிரிழந்த சம்பவம்; வனத்துறை விசாரணை

யானை உயிரிழந்த சம்பவம்; வனத்துறை விசாரணை

கூடலூர்; முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு, தொட்டகட்டி பிரிவு, ஜரிஷ்பாலம் அருகே, வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியின் போது, பெண் யானை உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது. வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதுமலை துணை இயக்குனர் வெங்கடேஷ், வனச்சரகர் சிவக்குமார் ஆகியோர் உடலை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு 45 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக, இயற்கையாக இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை