உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / முதுமலையில் சுதந்திர தின விழா கொடிக்கு யானைகள் மரியாதை

முதுமலையில் சுதந்திர தின விழா கொடிக்கு யானைகள் மரியாதை

கூடலுார்:முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றி, 79வது சுதந்திர தினம் கொண் டாடப்பட்டது. விழாவில், வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பாமா, காமாட்சி, சந்தோஷ், பொம்மன் ஆகியவை வரிசையில் நிற்க, அதன் மீது பாகன்கள், தேசிய கொடி ஏந்தி அமர்ந்திருந்தனர். யானைகளின் முன்னால் வன ஊழியர்கள் அணிவகுத்து நின்றனர். முதுமலை துணை இயக்குனர் வித்யா கொடி ஏற்றினார். வரிசையில் நின்றிருந்த வளர்ப்பு யானைகள் தும்பிக்கையை உயர்த்தி கொடிக்கு மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியை சுற்றுலா பயணியர் வெகுவாக ரசித்தனர். யானைக்கு பிறந்த நாள் தெப்பக்காடு யானைகள் முகாமில், 3 குட்டிகள் உட்பட 30 வளர்ப்பு யானைகளை பராமரித்து வருகின்றனர். அதில், மறைந்த வளர்ப்பு யானை ருக்குவுக்கு, 1971 ஆக., 15ல் சந்தோஷ் யானை பிறந்தது. இதன் 55வது பிறந்த தினம் துவங்குவதால், அதனை தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறையினர் கொண்டாடினர். இந்நிகழ்வை சுற்றுலா பயணியர் 'போட்டோ' எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை