மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
5 minutes ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
5 minutes ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
6 minutes ago
கோத்தகிரி:கோத்தகிரி பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் சிறுத்தை நடமாடியதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக, கரடி, சிறுத்தை, காட்டெருமை மற்றும் பன்றி உள்ளிட்ட, வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது தொடர்கிறது. இந்நிலையில், கோத்தகிரி சக்திமலை சாலையில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில், நேற்று முன்தினம் சிறுத்தை நடமாடியுள்ளது. ஒரே இடத்தில் அங்கும் இங்கும் சென்ற சிறுத்தை, ஒரு வழியாக அங்குள்ள புதருக்குள் மறைந்துள்ளது. சிறுத்தை நடமாட்டம்,அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சி.சி.டி.வி' கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த அலுவலர்கள் மற்றும் மக்கள் கொடுத்த தகவலின்படி, அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
5 minutes ago
5 minutes ago
6 minutes ago