உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆபத்தான மரத்தின் அருகே ஆக்கிரமிப்பு கடைகள்

ஆபத்தான மரத்தின் அருகே ஆக்கிரமிப்பு கடைகள்

குன்னுார்; குன்னுார் மலைபாதையில், ஆபத்தான மரங்களின் அருகே ஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது. குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைபாதையில், காட்டேரி முதல் நந்தகோபால் பாலம் வரையிலான பகுதியில், பல இடங்களிலும் தற்போது ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது. காட்டேரி சந்திப்பு பகுதியில், ஓராண்டிற்கு முன்பு ஆக்கிரமிப்பு கடை வந்த போது, அரசு கொறடா எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் ஆய்வு செய்த போது தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது, அங்கு மூன்று கடைகள் கட்டி வருவது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போல, பால்காரலைன் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்ட கடைகள் அதிகரித்து வருவதை நெடுஞ்சாலைதுறையினர் தடுக்கவில்லை. காட்டேரி பூங்கா பகுதியில், குன்னுாரை சேர்ந்த காங்., பிரமுகர்கள் ஆதரவுடன் புதிய கடைகள் கட்டப்பட்டு வருகிறது. அங்குள்ள பூங்கா பார்க்கிங் தளம் செல்லும் கேட் அருகே ஆபத்தான் பெரிய மரத்தை ஒட்டி ஆக்கிரமிப்பு கடை கட்டப்படுகிறது. மக்கள் கூறுகையில், 'காட்டேரியில் பகுதியில் ஆபத்தான மரங்களை ஒட்டி கடை கட்டப்பட்டு வருவதால் மழை காலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை