உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் கருத்து கேட்பு கூட்டம் திடீர் ரத்து

சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் கருத்து கேட்பு கூட்டம் திடீர் ரத்து

கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, கூடலுார் வருவாய் கோட்ட பகுதிகளில் நடக்கவிருந்த, சுற்றுச்சூழல் மண்டலத்துக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கூடலுார் வருவாய் கோட்டம் பகுதியில், சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்துக்கான மாஸ்டர் பிளான் தயாரிப்பு தொடர்பான பணிகளை வனத்துறையினர் துவங்கி உள்ளனர்.அதன்படி, முதுமலையை ஒட்டிய சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகளைச் சார்ந்த பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்களிடம், வனத்துறை சார்பில் கருத்து கேட்பு கூட்டத்தை இன்றும், நாளையும் நாடுகாணி ஜீன் பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில், வனத்துறை சார்பில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதற்கு, ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்ததுடன், 'கருத்து கேட்பு கூட்டம் நடத்த கூடாது; நடத்தினால் போராட்டம் நடத்த கூடாது,' என, தெரிவித்தனர். தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், கருத்து கேட்கும் கூட்டத்தை வனத்துறை திடீரென ரத்து செய்தது.வனத்துறையினர் கூறுகையில், 'வனத்துறையின் மேலிட உத்தரவுக்கு இணங்க கருத்து கேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை