உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை; ஓட்டு கேட்டு வந்தவர்கள் மீது கடும் அதிருப்தியில் பழங்குடிகள்

சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை; ஓட்டு கேட்டு வந்தவர்கள் மீது கடும் அதிருப்தியில் பழங்குடிகள்

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமான சாலைகளால் பழங்குடி மக்கள் அவதிப்படுகின்றனர். நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அய்யன்கொல்லி அமைந்துள்ளது. இதன் அருகே குதிரைவட்டம்-, செரியேறி சாலை அமைந்துள்ளது. இந்த வழியாக கூலால் பகுதிக்கும் செல்ல முடியும். இந்த பகுதிகளில் பழங்குடியினர் உள்ளிட்ட, 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அவசர காலங்களில் கூட, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வரமுடியாத நிலையில், வேறு வாகன வசதிகளும் இல்லாததால், பழங்குடியினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் எவ்வித பயனும் இதுவரை கிடைக்கவில்லை. இதனால், நொந்து போன மக்கள், 'வரும் தேர்தல்களில், மக்கள் பிரதிநிதிகள் யாரும் ஊருக்குள் யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது,' என, நுழைவாயில் பகுதியில் பேனர் வைத்துள்ளதுடன், கிராம கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். இதேபோல், இதனை ஒட்டிய குழிக்கடவு கிராமத்திற்கு செல்லும் சாலையும் சேதமடைந்துள்ளதால், இந்த கிராம மட்டுமின்றி தட்டாம்பாறை, சன்னக்கொல்லி பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால், இவர்களும் மக்கள் பிரநிதிகள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். கிராம மக்கள் கூறுகையில், 'தேர்தல் காலங்களில் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், 'அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,' என, உறுதி அளித்து ஓட்டு வாங்கி செல்கின்றனர். வெற்ற பெற்ற பின், ஒருவர் இந்த பக்கம் வருவதில்லை. குடிநீர், தெருவிளக்கு என எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர முன் வருவதில்லை. ஊராட்சி முழுவதும் இதே நிலை தொடரும் சூழலில், வரும் தேர்தலில் எங்கள் ஓட்டுகளை நோட்டாவுக்கு செலுத்த முடிவு செய்துள்ளதால், ஓட்டு கேட்டு யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை