உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மோப்பநாய் உதவியுடன் தாவரவியல் பூங்காவில் சோதனை

மோப்பநாய் உதவியுடன் தாவரவியல் பூங்காவில் சோதனை

ஊட்டி : ஊட்டி சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.குடியரசு தினம் இம் மாதம், 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு கருதி மாநிலம் முழுவதும் உள்ள, 'சுற்றுலா தலங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்நிலையம்,' என, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்து போலீசார் மோப்ப நாய் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.நீலகிரியில், எஸ்.பி., சுந்தரவடிவேல் உத்தரவுப்படி, ஊட்டி படகு இல்லம், அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் குன்னுார், கூடலுார் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மோப்பநாய் பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். 'இந்த சோதனை குடியரசு தினம் வரை தொடரும்,' என, போலீசார் தெரிவித்தனர்.எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறுகையில்,''எதிர்வரும் குடியரசு தினத்தை ஒட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுற்றுலா தலம், மக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை