உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உருளைகிழங்கு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

உருளைகிழங்கு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

குன்னூர்: நீலகிரியில் விளைவிக்கும், உருளைகிழங்கிற்கு விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உருளைகிழங்கு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கும் உருளை கிழங்கு மேட்டுப்பாளையம் ஏல மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து விலை உயர்வு ஏற்பட்டு, ஜூலையில், 45 கிலோ கொண்ட மூட்டை 3,390 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 1,810 ரூபாய் எனவும், குறைந்தபட்சமாக 310 ரூபாய் எனவும் இருந்தது. இதனால், உருளைக்கிழங்கு அறுவடையும் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ