உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மினி பஸ்களில் கட்டண உயர்வு; உள்ளூர் பயணிகள் கடும் அதிருப்தி

மினி பஸ்களில் கட்டண உயர்வு; உள்ளூர் பயணிகள் கடும் அதிருப்தி

குன்னுார்:போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்தின் போது, அரசு பஸ் வழித்தடங்களில் இயக்கப்படும் மினிபஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராடத்தில் ஈடுபட்டனர்.பல பகுதிகளில் பஸ்களை இயக்க, அரசு நடவடிக்கை எடுத்த போதும், நீலகிரி மாவட்டத்தில் நீண்ட நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் மக்கள் பயணம் செய்தனர்.சில இடங்களுக்கு, அரசின் அனுமதியுடன் மினி பஸ்களை இயக்கப்பட்ட போதும், பல மடங்கு உயர்த்தி கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.உதாரணமாக, 14 ரூபாய் வசூலிக்கும் குன்னுார் துாதுார்மட்டம் அரசு பஸ் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்சில், 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. 6 கி.மீ., துாரம் உள்ள குன்னுார் கரும்பாலத்திற்கு, 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. குன்னுாரில் இருந்து கோத்தகிரிக்கு, 17 ரூபாய் வசூலிக்கபட்ட வழித்தடத்தில், 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது.பயணிகள் கூறுகையில், 'வரும், 19ம் தேதி வரை ஸ்டிரைக் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டம் தொடர்ந்தால், இது போன்று மினி பஸ்களை இயக்கி அதிகபட்சம் கட்டணம் வசூலிப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை