மேலும் செய்திகள்
பிரச்னையும் தீர்வும் செய்தி
14-Sep-2024
கோத்தகிரி : கோத்தகிரி கக்குச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன், 46. இவர் நேற்று முன்தினம் இரவு, கட்டபெட்டு வழியாக, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, பில்லிகம்பையில் இருந்து, கட்டபெட்டு நோக்கி சென்ற கார், அவர் மீது மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறிய முருகன் துாக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன், பரிதாபமாக உயிரிழந்தார். கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
14-Sep-2024