உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30 கோரிக்கை மனுக்கள் பரிந்துரை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30 கோரிக்கை மனுக்கள் பரிந்துரை

ஊட்டி : ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 30 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஊட்டியியில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:ஊட்டியில் இரண்டாவது உழவர் சந்தை அமைக்கும் சாத்திய கூறுகளை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உழவர் செயலி பயன்படுத்த பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, கிராம ஊராட்சிகளில் மட்டும் செயல்படுத்தப்படும் கால்நடை கொட்டகைகள் அமைக்கும் திட்டத்தை, பேரூராட்சி மற்றும் நகராட்சி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படுத்த அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, தீவன பயிர்களின் வரவு, விவசாயிகளின் தேவை போன்றவை குறித்து, கலந்துரையாடி அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவும், விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் பேசினார்.தொடர்ந்து, 'நானோ உர பயன்பாடு' குறித்து, 'இப்கோ' நிறுவனம் மூலம், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.டி.ஆர்.ஓ., நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, துணை இயக்குனர் ஆம்ரோஸ் பேகம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை